நான் தாங் டெங்கு … ஊது வேண்டா சங்கு …
டெங்கு விழிப்புணர்வு குறித்து சம்பத் என்பவர் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு …
மழைக் காலம் என்றாலே மனசுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் பதற்றம் பீதி. மழைக் கால தொற்று நோய்கள் ஏதேனும் பொது மக்களை ஆட்கொண்டு பெரும் ஆபத்தை நோக்கி பயணிக்க வைத்து விடுமோ என்ற அச்சம் எழுந்து விடும். அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது டெங்கு காய்ச்சல். இதற்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது ஏடிஸ் கொசு. ஏடிஸ் கொசு கடியால் இந்த டெங்கு உருவாகிறது. இந்த கொசு உருவாக காரணமாக இருப்பது தேவையற்ற தண்ணீர் தேக்கம். குறிப்பாக தொட்டாங்குச்சி முதல் வாட்டர்பாட்டில் உள்ளிட்ட பொருட்களை நாம் வெளியில் வீசும் பொழுது அதில் தேங்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகிறது. எனவே கொசு உற்பத்தியை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். அதன் அடிப்படையில் கோவையில் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு குறித்தும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையைச் சார்ந்த சம்பத் என்ற நபர் டெங்கு கொசு போன்ற வேடமனிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகளில் உலா வரும் இவர் தன் கழுத்தில் *நான் தாண்டா டெங்கு … ஊது வேண்டாம் சங்கு* என்ற வாசகத்தை அடங்கிய பதாகையை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். அதேபோன்று கொசு உற்பத்தியாகும் இடமான கொட்டாங்குச்சி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களை கொண்டு மாலை தயாரித்து அணிந்திருக்கின்றார். இதன் பொருள் இது போன்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். கேட்பாடற்று பொதுவெளியில் வீசக்கூடாது. சம்பத் செய்யும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சம்பத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பார்த்துவிட்டு பாராட்டுவதோடு மட்டுமின்றி பொதுமக்கள் சுற்றுப்புறத்தையும் பொதுவெளியையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
Leave a Reply