ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாகாத்தம்மன் நகர் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி அலமேலு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்த சமயம் பார்த்து யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தான் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதோடு மட்டுமில்லாமல் போலீசே என்னை பிடியுங்கள் பார்க்கலாம் என கடிதத்தை எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருநின்றவூர் போலீசார் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையில் போலீஸ் படையினர் தீவிரமாக துப்புத் துலக்கி ஆவடி காந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரஞ்சித் குமார் வயது 25 என்பவனை கைது செய்து விசாரிக்கையில் நகையை கொள்ளை அடித்தது தான் என ஒப்புக்கொண்டான். ஒப்புதல் வாக்குமூலத்தில் அவன் கூறியிருப்பதாவது உலக நாடு முழுவதும் உல்லாசமாக சுற்றி திரிய மிதவை கப்பலில் பயணம் செய்யவும் அந்தக் கப்பலில் நீச்சல் குளத்தின் டைவ் அடித்து நீந்தி திரியவும் கப்பலில் இருக்கும் சினிமா தியேட்டரில் உல்லாசமாக படத்தைப் பார்க்கவும் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடவும் அழகிகளோடு கும்மாங்குத்து ஆட்டம் போடவும் எனக்கு நீண்ட நாட்களாக ஆசை இந்த ஆசையை அனுபவிக்க நகைகளை கொள்ளை அடித்து விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான் . இது பற்றி உதவி ஆணையர் சுரேஷ் குற்றவாளிடம் பேசும்போது கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் கூட்டி பார் மாதம் 30 ஆயிரம் வருமானம் சித்தாள் வேலைக்கு செல் கணிசமான வருமானம் ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் பிழைப்பு தேவையா எனது சம்பள பணத்தில் இருந்து சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி வான் கோழி பிரியாணி எறா பிரியாணி வாங்கித் தருகிறேன் உனது தாய் மீது சத்தியம் செய்து சொல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து சொல் திருட மாட்டேன் கொள்ளை அடிக்க மாட்டேன் திருந்தி வாழ்கிறேன் என சொல் என அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் குறித்து திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையன் ரஞ்சித் குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டான்..