ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அந்த வகையில் அதிமுக திமுக கூட்டணியை தவிர நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளராக நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.
அதேபோல் தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாகவும் பாமக போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஆர்கே நகர் போல ஈரோடு கிழக்கு தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஜனவரி 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.