கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வரதையம் பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஓட்ட வில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடையை மீறும் அளவிற்கும் மதிப்பிரியர்கள் அங்கு காணப்பட்டனர்.ஓட்டலில் உள்ள எல்லா அறைகளிலும் மது பிரியர்கள் ஜாலியாக மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து இந்த ஓட்டலில் உரிமையாளர் யார்? என போலீசார்விசாரணை நடத்தினார்கள். விசாரணையில்திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அவர் அன்னூர் அருகே கணேசபுரம்பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்புசப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 28) மற்றும் அரியலூர் மாவட்டம் ஓரந்தூர் விளான்குடி தெற்கு தெருவை சேர்ந்த புஷ்பவேல் ( வயது 30) ஆகிய 2 பேரும் சேர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வந்து இங்குபதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 737 மதுபாட்டில்கள்பறிமுதல் செய்யப்பட்டன.மது விற்ற பணம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் ஓட்டலில் பார் நடத்தி போலீஸ் அதிகாரி மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.