கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு ரொட்டிக்கடை பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் பழுதான சாலையை சீரமைக்க அதற்க்கான பூமி பூஜை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன், தோட்டத்தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதேபோல 8 வது வார்டுக்கு உட்பட்ட சோலையாறு அணை பகுதியில் உள்ள மண் ரோட்டை சீரமைக்க அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட்சாலை அமைக்க அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட நிலையில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.26 லட்சம் மதிப்பிலான பணி மேற்க்கொள்ள நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ.அமுல் கந்தசாமிக்கு பொதுமக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்