கோவை வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் கோபால் ( வயது 74) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது இதில் பேசிய நபர் நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார்..ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் நான் அனுப்பும் வங்கி முகவரிக்குநீங்கள் பணத்தை அனுப்பவும் என்று கூறினார்.கோபாலும் அந்த முகவரிக்கு பணம் அனுப்பினார்.சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ8 லட்சத்து 10 ஆயிரத்து 444 மாயமானது.இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.