கோவை சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த தலைமை வார்டன் “சஸ்பெண்ட்'” கோவை ஜன 1 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள் .இதில் சிறையில் உள்ள 19வது அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஜெயராம் என்பவரிடமிருந்து 8 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து அவரிடம் கஞ்சா வழங்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மற்றொரு கைதியான பார்த்தசாரதி என்பவர் தன்னிடம் கஞ்சா கொடுத்து மறைத்து வைக்க சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து பார்த்தசாரதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதில் சிறையில் தலைமை வார்டனாக பணி புரியும் ஜெயச்சந்திரன் என்பவர் தன்னிடம் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்துசிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார் .இந்த நிலையில் நேற்று தலைமை வார்டன் ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். மேலும் கோவை மத்திய சிறையில் கைதிகளைக் காண வருபவர்களை 2 கட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். சிறை கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.