கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை; பேரன் கைது …

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகாத்தாள் (வயது 60)கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆனைமலை யைஅடுத்த வேட்டைக்காரன் புதூர் அறிவொளி நகரை சேர்ந்த மணிகண்டன்( வயது 23 ) என்பவர் உறவு முறையில் பேரன் ஆவார். இவர் எஸ் .சந்திரபுரம் செல்லும் போது பாட்டி நாகாத்தாளுக்காக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொடுப்பார். இந்த நிலையில் நேற்று காலைபாட்டி நாகாத்தாள் வீட்டிற்கு சென்றார். ஏற்கனவே அரசு சார்பில் புது காலனி பகுதியில் ஒன்றரை சென்ட் இடம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த இடத்தை தன் பெயரில் எழுதி தர வேண்டும் என்று மணிகண்டன் கேட்டாராம். அதற்கு அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த மணிகண்டன் ஆத்திரத்தில் அங்கிருந்து கல்லை எடுத்து பாட்டி நாகாத்தாளின் தலையில் ஓங்கி அடித்தார் .தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .அந்த பகுதியை பதுங்கி இருந்த பேரன் மணி கண்டனை கைது செய்தனர்.ஒன்றரை சென்ட் நிலத்துக்காக பாட்டியை பேரன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.