கோவையில் மலையாள திரைப்பட இயக்குனர் வினு திடீர்மரணம் …

மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் நேற்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு ” மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவரதுஇயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ஆகாஷ் ஹொம்ஸ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.பிரபல நடிகர் ஜெயராம் நடித்த “ஆயுஸ்ஷ்மான்பவா” “குசுர்திகாற்று'” பர்த்தாவு உத்தியோகம்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.