திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
மள்ளியம்பத்து ஆளவந்தநல்லூர் மருதாண்டாகுறிச்சி ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் மூலம் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி அருண்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்கண்ட இடங்களில் சோமரசம் பேட்டை காவல்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது அங்கு ராகுல் 20 வயது குறிஞ்சி நகர் மருதாண்டாகுறிச்சி திருவரம்பூர் மனோஜ் ஆளவந்தநல்லூர் மதன்குமார் ராமலிங்கம் அம்மையநல்லூர் மல்லியம் பத்து மருதாண்டக்குறிச்சி சரவணன் கல்யாயக்கன் தெரு உறையூர் பதன்ராஜ் பொன்னுச்சாமி அர்ஜுன தெரு ஆகியோர் கையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அங்கு கடந்து செல்பவர்களிடம் நாங்க இந்த ஏரியாவில் பெரிய ரவடிங்கடா என்றும், எங்ககிட்ட கஞ்சா வாங்கிட்டு போங்கடா என்றும், இல்லையென்றால் தலை துண்டாகிடும் மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்த போது தப்ப முயன்றவர்களை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து, மேற்படி 5 நபர்களின் மீதும், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நேரலையாக வீடியோ (Live video) பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். மேற்படி வழக்கின் எதிரிகளில், A1) ராகுல் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகள். A2) பரமகுரு என்பவர் மீது 4 வழக்குகள், A3) மதன்குமார் என்பவர் மீது 7 வழக்குகள், A4) சரவணன் என்பவர் மீது ஒரு வழக்கும் என மேற்படி நபர்கள் மீது ஏற்கனவே திருச்சி மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் இது போன்று அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள், போதை பொருட்களை பயன்படுத்தும் விதமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடும் நபர்கள், அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் மற்றும் பிற விழா காலங்களில் கேக்குகள் வெட்டும் நபர்கள், வில்லன்கள் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் மற்றும் வீடியோக்களை YouTube, Facebook, Instagram, Whatsapp, Twitter போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்களின் விபரங்களை திருச்சி மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள கண்காணிப்பு குழு (Social Media Cell) மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கஞ்சா விற்கும் அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
திருச்சியில் பொதுமக்களை மிரட்டி கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் கைது…
