கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு முதியவர் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார்.மனுவுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.விசாரணையில் அவரது பெயர் பாலசுப்பிரமணியம் ( வயது 83) பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மயங்கி விழுந்து முதியவர் சாவு…
