கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சங்கர் (வயது 42 ) கைது செய்யப்பட்டார். இவர் அந்த ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். அங்கிருந்த விலை உயர்ந்த 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கோவை ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை – மேலாளர் கைது..!
