கோவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை சூதாட்டம் .76பேர் கைது…

கோவை மாவட்டம்மற்றும் கோவை மாநகரம் முழுவதும் பொங்கல் பண்டிகையை யொட்டி சேவல் சண்டை சூதாட்டம், சீட்டு விளையாட்டுஆகியவற்றை தடுக்கபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்ஆகியோர்உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தனிப்படையினர் நேற்று மாவட்டம்,மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை மற்றும் சீட்டாட்டம் நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்கணித்தனர். இந்த நிலையில் ஆனைமலை போலீசார் அங்குள்ள வக்கம் பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி ராஜதுரை பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சமத்துவபுரம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பொள்ளாச்சி சுங்கம் பகுதியைச் சேர்ந்த அப்பாதுரை , தென் சங்கம்பாளையம் முத்துசாமி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கே ஜி சாவடி போலீசார் அங்குள்ள எட்டி மடையில் ஒரு தோட்டத்தில் நடத்திய சோதனையில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பொள்ளாச்சி ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் , நவக்கரை ராம் பிரகாஷ் , நந்து உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பணம்பறிமுதல் செய்யப்பட்டது. சுல்தான்பேட்டை போலீசார் அங்குள்ள வரப்பாளையம் பள்ளிக்கூடம் அருகே நடத்திய சோதனையில் பணம் வைத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் ஜமீன் ஊத்துக்குளிவாய்க்கால் மேடு கிருஷ்ணன் கோவில் அருகில்சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக போடிபாளையம் ரகு, மீன்கரை ரோடு குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர் .2 சேவல்கள்பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர் போலீசார் அங்குள்ள சிலம்பனூர் காளி சாமி தோட்டம் அருகே நடத்திய சோதனையில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக தேவராயபுரம் சத்குரு வெள்ளிமலை பட்டினம் காளி சாமி உட்பட 4 பேர்கைது செய்யப்பட்டனர். சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரமடை போலீசார் அங்குள்ள கண்டியூர் பாலம் அருகே நடத்திய சோதனையில் ப ணம் வைத்து சீட்டு விளையாடியதாக வெள்ளியங்காடு உதயகுமார் பழனிச்சாமி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டது .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ.38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ஒன்னி பாளையம் வனப்பகுதியில் நடத்திய சோதனையில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக தேவராயபுரம் தினேஷ்குமார்,கவுண்டம் பாளையம்செந்தில்குமார் சரவணம்பட்டி ஹரி கிருஷ்ணன்ஆகியோரை கைது செய்தனர்.. பணம் ரூ. 2ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல காரமடை போலீசார் அங்குள்ள ஒரு தோட்டத்தில் நடத்திய சோதனையில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மில்லன் குமார்உட்பட 4 பேரை கைது செய்தனர்..தொண்டாமுத்தூர் போலீசார் அங்குள்ள வஞ்சிமா நகர் வீரமாச்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடியதாகஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த இத்திஷ் உட்பட 6 பேரைகைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுவிளையாட பயன்படுத்தப்பட்டரு 2,100 பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல கோவை மாநகர போலீசாரும்கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். குனியமுத்தூர்போலீசார் கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் பகுதியில் நடத்திய சோதனையில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக குளத்துப்பாளையம் ரமேஷ் குமார் பேரூர் பரமசிவம் பச்சாபாளையம் ராமகிருஷ்ண மூர்த்தி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர் சூதாட பயன்படுத்தப்பட்ட 20040 ரூபாயும் 2 ப
பக்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.ரத்தினபுரி போலீசார் அங்குள்ள கண்ணப்பன் நகர் முருக நகர் பகுதியில் உள்ள நடத்திய சோதனையில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கண்ணப்பன் நகரை சேர்ந்த அசோகன் பாபு உட்பட ஆறு பேரு கைது செய்தனர்.சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ஒரு 1500 பறிமுதல் செய்யப்பட்டது.ரேஸ்கோர்ஸ் போலீசார் கீதா ஹால் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜ் கார் பார்க்கிங் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுகிறார்கள் பாண்டியன் கருமத்தம்பட்டி பாலாஜி உக்கடம் சசிகுமார் உட்பட 7 பேரை கைது செய்தனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ 10 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டது.. வெரைட்டிஹால் ரோடு போலீசார் சாமி ஐயர் புது வீதியில் உள்ள கார் பார்க்கிங்கில்நடத்திய சோதனையில் பணம் வைத்துசீட்டு விளையாடியதாக சுந்தரம்வீதியைச் சேர்ந்த சந்தோஷ் சுக்கிரவார்பேட்டை ஆனந்த், கெம்பட்டி காலனி கார்த்திக் உட்பட 6 பேரை கைது செய்தனர் சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ2,080 பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து மாவட்டம்,மாநகரம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.