கோவை புது சித்தாபுதூர், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) ஆன்லைன் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் அன்னூரில் தனது அத்தை வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பால் என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார். இதையடுத்து அன்பழகன் அங்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது..அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அன்பழகன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டப்பகலில் துணிகரம்… கோவை வியாபாரி வீட்டில் 13 பவுன் நகை,1 கிலோ வெள்ளி திருட்டு..!
