கோவையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணம் கொள்ளை..!

கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 41) தனியார்  நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியும் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துபீரோவை திறந்து அதில் இருந்த 29 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளயடித்து சென்று விட்டனர். இது குறித்து தமிழ் செல்வன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பட்டப் பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.