கோவையில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
கோவை கணுவாய் பகுதியில் திருப்பதிக்குச் சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 2 ½ சவரன் தங்க சங்கிலி மற்றும் 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சபவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கணுவாய் பாரதி கார்சன் பகுதியில் கடந்த 2 வருடமாக குடியிருந்து வருபவர் முத்துகுமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். பின்பு நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கபப்ட்டு அதில் இருந்த 2 ½ சவான் தங்க சங்கிலி மற்றும் 2500 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடாகம் காவல் நிலையத்தில் முத்துகுமார் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.