கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அவரது நண்பர் வீட்டில் சோதனை…..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, கரூர் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திக் என்பவர் வீட்டில் பத்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன்
கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.
செந்தில் பாலாஜியோடு நெருக்கமான இவர் வீட்டில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.