கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ்
(வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வேலையும் கிடைக்கவில்லை.
இதன் காரணமான அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து
காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று அந்த வழியாக
செல்லாண்டி கவுண்டன் புதூரில் இருந்த அரசு பஸ்சை வழி மறித்து கண்ணாடியை
அடித்து உடைத்தார். இது குறித்து அரசு பஸ் டிரைவர் மாணிக்கவாசகம் (54)
என்பவர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை
கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.