நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி
இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன்,
கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட
அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில்
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை
செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். சில வியாபாரிகள் ஒருமுறை
பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம்
விதிக்கப்பட்டது. அரவேணு பஜாரில் தாசில்தார் காயத்ரி தலைமையில் கடைகளில்
சோதனை மேற்கொண்டனர். அங்கு 29 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 500 அபராதம்
விதிக்கப்பட்டது.
கோத்தகிரியில் 4½ கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள்
அல்லது கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டம்ளர்கள்,
தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை
விடுத்தார்.