இதில்தான் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இவரிடம் விசாரணை நடக்கும் நிலையில்தான் சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜாபர் சாதிக் வீடு உள்பட தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.!!

சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்காக பிரதமர் சென்னை வரும் அதே நாளில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் அளித்த தகவலின்படி நடந்த இந்த ரெய்டில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.