நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம் – மர்ம நபருக்கு வலைவீச்சு..!

கேரள மாநிலம் பாலக்காடு கொடுவாயூரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகள் அஞ்சு கிருஷ்ணா ( வயது 22) இவர் கணபதி சி. எம்.எஸ்.ஸ்கூல் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். அத்திப்பாளையம் பிரிவு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணபதி சி எம்எஸ் பள்ளிக்கூடம் அருகே வேலை முடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி திடீரென்று இவரது மார்பை தொட்டு மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்.