திருச்சியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் இலவச வீடு வேண்டி 2 வருடமாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் சர்வே எண் 219/59 ஏர்ஸ் பட்டா எண் 3856 ஆகும். நாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை இலவச பட்டா அரசு வழங்கி இருக்கிறது . எங்களுக்கு வசதி இல்லாத காரணத்தால் வீடு கட்ட முடியவில்லை .எங்களால் கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறோம் . அரசு இதை பரிசீளித்து எங்கள் 40 குடும்பங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதை மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்..