திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் வெங்களாபுரம் பகுதியில் ஆவின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. விவசாயிகள் மற்றும் பால் முகவர்களின் தொடர் கோரிக்கையின் காரணமாக தற்பொழுது திமுக அரசு பத்து ரூபாய் வரை பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் ஆவின் மூலம் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
பால் உற்பத்தியை கூட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.
திருப்பத்தூர் நகராட்சி அரச மர தெரு பகுதியில் 25 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ள ஆவின் பாலகம் விரைவில் திறக்க அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்பூர் பகுதியில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பேசினார். இதில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாகண்ரங்கம், கந்திலி ஒன்றிய சேர்மன் திருமதிதிருமுருகன், ஒன்றிய துணை தலைவர் மோகன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் மற்றும் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வி அசோகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், கந்திலி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் ராஜா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.