கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, (41). இவர்களின் மகன் ஜெயசூர்யா (11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன் (25) என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த சனிக்கிழமை ஜெயசூர்யாவை, டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வருவதாக கூறி ஜெயசூர்யாவை கடத்தி சென்றார். பின்னர் ரூ.12 லட்சம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாகவும், பணம் தரவில்லை எனில், கொலை செய்து விடுவதாகவும் பெற்றோரை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கிருத்திகா துடியலுார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சிறுவனை ஈரோடு மாவட்டம் பவானி அருகே மீட்டனர். தொடர்ந்து நவீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவம்… டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்.!!
