கோவை – பொள்ளாச்சி ரயில் உள்பட 6 ரயில்களில் பாா்சல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூரு – யஷ்வந்த்பூா் வாராந்திர விரைவு ரயில் (எண்:16540), பொள்ளாச்சி – கோவை தினசரி ரயில் (எண்: 06420), நிலம்பூா் சாலை – ஷொரனூா் தினசரி ரயில் (எண்: 06466), ஷொரனூா் – நிலம்பூா் சாலை தினசரி ரயில் (எண்: 06473), செருவத்தூா் – மங்களூரு விரைவு ரயில் (06491), கண்ணூா் – செருவத்தூா் விரைவு ரயில் (எண்: 06469) ஆகிய 6 ரயில்களில் 100 கிலோ மீட்டா் வரை 1 டன் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ.286 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் 2023-ம் ஆண்டு மே 31 -ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.