அதிகரிக்கும் வெப்பம்… பேரிடர் பட்டியலில் வெயிலைச் சேர்க்க மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை..!

டந்த சில வருடங்களாகவே கோடைக்காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில், வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் வெயில் தாக்கத்தை பேரிடர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, ‘அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் இவைகளை சேர்க்க இந்த குழு பரிந்துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

சேதங்களை குறைக்கவும், விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனைகள், பள்ளிகள் இவைகளில் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் அதிக முதலீடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பா.ஜகவின் ராஜ்யசபா எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையிலான 31 பேர் கொண்ட கு நீண்டகால பேரிடர் தயார்நிலை குறித்து ஆய்வு செய்து திட்டமிடும்படி மத்திய அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.