ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியனின் தூதர் உகோ அஸ்டுடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பான தீர்மானம் குறித்து ஐநா சபையில் இந்தியா புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலத்திற்கு முன்பு கூறியதையும் நாங்கள் கவனித்துள்ளோம்’ என்று அஸ்துடோ மேலும் கூறினார்.