ஜி-20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளையும் இந்தியா முன்னேற்றி வருகிறது – பிரதமர் மோடி..!

உலகளாவிய புவிசார் அரசியல் காரணமாக பதட்டங்கள் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்த முடியும் என்பதை ஜி-20 நாடுகளை இதற்கு முன்பு தலைமையேற்று நடத்திய இந்தோனேசியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்த இந்தியாவும் உறுதி செய்துள்ளது. வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜ-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஜப்பான்,ரஷ்யா, ஜெர்மனி, கனடா, பிரேசில், தென்ஆப்பரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜி-20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளையும் முன்னேற்றுவதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது என நெட்வொர்க் 18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் அனைவருக்குமான வளர்ச்சியில் அனைவரின் பங்கு மற்றும் அனைவருக்குமான நம்பிக்கைக்காக அனைவரின் முயற்சி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதே கொள்கையத் தான் சர்வதேச நாடுகளுக்கான உறவிலும் கடைப்பிடிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்கான கருத்தை நாங்கள் முன்வைத்த போது, அதை உலகமே வரவேற்றது. ஏனென்றால், சர்வதேச விவகாரங்ள் தொடர்பான எங்கள் அனுகுமுறையிலும் இதே கெள்கையைத் தான் கடைப்பிடிக்கிறோம் என்றார் பிரதமர் மோடி. எதிர்கால உலகை கட்டமைப்பதில் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதால், உலகளாவிய் கொள்கைகளில் இந்தியாவின் முன்னிறுத்தலையும், நிலைப்பாட்டையும் சர்வதேச தலைவர்கள் வரவேற்கிறார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, அதனால் தான் ஜி-20 அமைப்பை வலுப்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனின் உறுப்புரிமை விவகாரத்தில் பிரதமர் மோடி முனைப்பு காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம், டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ஆப்ரிக்க யூனியன் அங்கம் வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 55 நாடுகளை உள்ளடக்கிய ஒரு செல்வாக்குமிக்க அமைப்பாக ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளது. அந்த அமைப்பு ஜி-20 அமைப்பில் உறுப்பினராக இணைவது பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என மோடி நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.