டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் 6G தொலைத் தொடர்பு வசதிக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு வைத்து இருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தொலைதொடர்பு பொதுச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒரு நிகழ்ச்சியில் புதிய ஒரு செயலியையும் நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார். அந்த செயலி தொடக்க விழாவின் போது புதுச்சேரி அமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் வழியாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமான 5G தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த 120 நாட்களில் 125 நகரங்களுக்கு விரிவாக இருப்பதாக பிரதமர் தன்னுடைய உரையின் போது தெரிவித்து இருக்கிறார். 4ஜி தொழில்நுட்பத்திற்கு முன்பாக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற நாடாக மட்டுமே இந்தியா திகழ்ந்தது, ஆனால் தற்பொழுது இந்தியா அந்த தொழில்நுட்பத்தின் ஏற்றுமதியாளராக அதிவேகமாக முன்னேறி வருகிறது. வரும் நாட்களில் 5ஜி தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் 100 உருவாக்கப்படும் இந்தியாவின் தனித்துவமான சேவைகளுக்கு ஏற்ப பயிற்சி செயலிகளை மேம்படுத்துவதற்கு ஆய்வுக்கூடங்கள் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார். இந்த 10 ஆண்டு தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அபாயகரமானது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பாக கடந்து 9 ஆண்டுகளில் அரசுத் துறையினரும், தனியார் துறையினரும் இணைந்து 25 லட்சம் km தொலைவிற்கு அதிகமான கண்ணாடி நிலை கேபிள்களை பதித்து இருக்கிறார்கள். இரண்டு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் கண்ணாடி இலை கேபிள்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன ஐந்து லட்சம் பொது சேவை மையங்கள் டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. நம் நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்ற பொருளாதாரத்தை விட இரண்டரை மடங்கு வேகமாக வளர்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஒரு நிகழ்ச்சியின் போது புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் வீடியோ கான்ஃபிடன்ஸ் வழியாக பங்கேற்று இருக்கிறார்.