பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொடூரத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு அங்குள்ள இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.