தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பை சேர்ந்தவர் சிம்மி வயது 21. திருநங்கையான இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர்கள் கலக்கத்துடன் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி நீலாங்கரை தாழம்பூர் காவல் நிலையங்களில் காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் சிம்மியை காணவில்லை என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த நிலையில் ஜனவரி 28ஆம் தேதி செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலையை அடுத்த மு ட்புதூரில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இறந்தவர் கைகளில் வெ ட்டுக்காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் . இந்நிலையில் காணாமல் போன சிம் மியின் பெற்றோரை அழைத்து காட்டினர். அவர்களும் கொலை செய்யப்பட்டு கிடப்பது சிம்மிதான் என அடையாளம் காட்டினர் .பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த கொலைகளை யார் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் 60 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட திருநங்கைகள் கைது செய்யப்பட்டிருந்தனர் . அவர்களை நீதிமன்ற காவலில் இருந்த திருநங்கைகள் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அபர்ணா வயது.27. ஆனந்தி வயது 37. ரவி வயது 35. கண்ணகி நகரை சேர்ந்த அபி வயது 32. ஆகியோர் கஞ்சா விற்கும் போட்டியில் ஆண்களை மயக்கும் விதத்தில் ஏற்பட்ட தொழில் போட்டியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர் . இதை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து திருநங்கைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்..