கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூரை சேர்ந்தவர் விஜித்குமார் (வயது 36) இவர் கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று லாட்ஜில் உள்ள மின்விசிறியில்பெட் சீட்டை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை லாட்ஜில் இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை..
