கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க சோலார் தொப்பி – குளிர்பானம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வரும் 235சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி குளிர்பானம் மற்றும் கண் கண்ணாடி ஆகியவற்றை வழங்கினார் . பின்னர் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோடைகாலத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கு வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண தொப்பியில் வெயில் படும்போது அது சூடாகி வியர்வை வெளியேறும். ஆனால் சோலார் தொப்பி எடை குறைவாக இருப்பதால் வெப்பம் உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால்காவலர்கள் நீண்ட நேரம் வெயிலில் நின்று பணியாற்றும்போதுவெயில் தாக்கம் அதிகமாக தாக்காது .இது தவிர தினமும் அவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்படுகிறது. கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .அது போன்று மாநகர பகுதியில் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் .குற்ற சம்பவம் நடப்பதை தடுக்க 24 மணி நேர ரோந்து பணி தொடங்கப்பட்டது. இதன் பின்னர் மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் ஒரு மாதத்தில் குற்ற சம்பவம் 178 ஆக இருந்தது. தற்போது அது 128 ஆக குறைந்து இருக்கிறது. இன்னும் ரோந்து பணியை அதிகரித்து குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்..
கோவையில் ரவுடிகள் நடமாட்டம் தீவீர கண்காணிப்பு – போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேட்டி.!!
