சர்வதேச சிட்டு குருவிகள் தினம்… உதகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சிட்டுக்குருவிகளுக்கு கூடுகள் அமைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க வேண்டும் என்பதை தெரிவிக்கு விதமாக அனைத்து மாணவி கைகளிலும் பறவைகளின் கூடு வடிவம் கொடுக்கப்பட்டது,
இயற்கை விவசாயத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் தொடங்குவோம். சிட்டுக்குருவியை நஞ்சில் இருந்து பாதுகாப்போம். என்ற கருப்பொருளோடு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது 20-3 2025
நீலகிரி உதகை அரசு மேல்நிலைப்பள்ளி உதகை.காலை 10:30 மணியளவில்
தலைமை: T.விஜயகுமார் தலைமை ஆசிரியர்
முனைவர்:மோகன தேவி அ மே பள்ளி உதகை
ஜனார்த்தனன் மக்கள் விழிப்புணர்வு சங்கம்
ராஜ்குமார் ஓவிய ஆசிரியர்
கருத்துரை: வே சிவதாஸ் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்,
வேகமாக அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்து வருவதை முக்கிய காரணமாக காண்கின்றோம். வீடுகள் கட்டும்போது மழைநீர் சேகரிப்பு எத்தனை அவசியமோ அதே போன்று சிட்டு குருவிகள் கூடு கட்ட புகலிடம் தருவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சி நிறைவில் தேசிய பசுமை படை நீலகிரி ஒருங்கிணைப்பாளர் வே சிவதாஸ் அவர்கள் சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தற்போது சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் நிலையையும் அதனைப் பாதுகாத்து இனி வரும் காலங்களில் காப்பாற்றுவதை குறித்த விழிப்புணர்வு செய்து வழங்கினார், இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது, ஆனால் இன்று உலகம் இதனை கொண்டாடக் கூடிய நிலையில் இல்லை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தற்போது அழிந்து வரும் நிலையில் மக்களுடைய கவனம் இயற்கையின் மீது குறைவாக உள்ளதால் இதுபோன்ற பறவைகள் வனவிலங்குகள் குறித்து முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும், தற்போது சிட்டுக்குருவிகள் உலக அழிவிலும் நம் நாடு இந்தியாவிலும் பெருமளவில் அழிந்து வருகிறது, அமெரிக்கா ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் சிட்டுக்குருவிகள் பல வருடங்களுக்கு முன்பாகவே அழிந்து விட்டன, ஆனால் நமது இந்திய நாட்டில் பல கிராமங்களில் சிட்டுக்குருவிகள் தற்போது இருப்பது தெரியவந்துள்ளது, அதற்கு முக்கிய காரணம் ஓடு வீடுகள் உள்ள இடங்களில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவது அதிகம் என்பதை ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது, சிட்டுக்குருவிகள் மரங்கள் செடிகளில் கூடு கட்டாதே மனிதர்கள் வசிக்கும் இடங்களில் கூடுகள் கட்டும் தன்மை உள்ளது, ஏனெனில் மற்ற மிருகங்கள் வேட்டையாடக்கூடிய நிலையில் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக மனிதன் வாழும் இடத்தில் கூடுகளைக் கட்டி வருகின்றன, இந்த சிட்டுக்குருவிகள் அழியாமல் இருக்க நம் வசிக்கும் வீடுகளில் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைத்து தர வேண்டும், இன்று சிட்டுக்குருவிகள் அதிக அளவில் அழிவதற்கு காரணம் பூச்சிக்கொல்லி மருந்து ரசாயனம் போன்ற மருந்துகள் விவசாயத் தோட்டங்களில் தெளிப்பதினால் இறந்த பூச்சிகளை குருவிகள் அதனுடைய குட்டிகள் சாப்பிடும் பொழுது சிட்டுக்குருவிகள் இறந்து போகிறது, மற்றும் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு சிட்டுக்குருவிகள் அழியும் தன்மை ஏற்படுகிறது, அதுமட்டுமல்லாமல் எலக்ட்ரானிக் மீடியா மற்றும் செல்போன் டவர்கள் அதிகமாக இருப்பதால் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சிட்டுக்குருவிகளின் பெருக்கம் குறைந்து வருகிறது, சிலர் ஆர்வமாக சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்கு அட்டப்பெட்டியில் கூண்டுகளை அமைக்கிறார்கள் மழைக்காலங்களில் அது சேதுமடைந்து கீழே விழும் பொழுது முட்டையும் வீணாகிப் போய்விடும் இதற்கு பதிலாக மண்சட்டிகள் மூங்கில்கள் போன்ற பொருட்களில் குண்டு அமைத்து வையுங்கள் அது அதற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார், மற்றும் சிட்டுக்குருவிகளுக்கு அரிசிகள் போடும் பொழுது வயிறு வீங்கி இறந்து போக அதிக வாய்ப்புள்ளது, ஆதலால் சிறு தானியங்கள் அதிகமாக கொடுங்கள், இந்த சிறு தானியங்கள் குருவிகளின் முட்டைகளுக்கு அதிகம் கால்சியம் தரக்கூடிய ஒரு தன்மை உள்ளது என்றார். மற்றும் தற்போது வெயில் காலத்தில் காரணமாக, வீடுகளில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர் வைத்து உதவுங்கள், உங்கள் வீட்டில் உள்ள இயற்கை தோட்டங்களில் பகுதியில் குண்டுகள் அமைத்து வைத்தால் அங்கே சிட்டுக்குருவிகள் வாழ்ந்து சிறு சிறு பூச்சிகளை உண்டு இயற்கையாகவே வாழ அது பெரிதாக உதவும் என்பது நாம் புரிந்துகொண்டு அடுத்து வரும் தலைமுறைக்கு சிட்டுக்குருவிகள் அதிகமாக பெருகும் என்பதை நம்பி நாம் தொடர்ந்து பணிகளை செய்வோம், தற்போது மழை நீர் சேமிப்பதற்காக முக்கியத்துவம் கொடுத்து கட்டமைப்பு கட்டாயம் உள்ளதோ அதுபோல சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாக வீடுகள் கட்டும்போது சிட்டுக்குருவிகள் இனப்பெருக்காக இயற்கையோடு இணைந்து அதற்கும் வலிகள் செய்து தந்து வீடுகள் கட்டும் பொழுது சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் வரும் தலைமுறைக்கு இது ஒரு முக்கிய கடமை என்பதை மிகத் தாழ்மையுடன் அனைத்து மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று சிறப்புரையில் தேசிய பசுமை படை நீலகிரி ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அவர்கள் உரையாற்றினார், விழா நிறைவாக அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றனர்,