நீலகிரி மாவட்டத்தின் மழை மறைவு பிரதேசமான மசினகுடியில் சர்வதேச தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது. மூத்த ஆசிரியர் சந்திர பாபு வரவேற்று பேசுகையில் மசினகுடியில் கடந்த ஆண்டு விட இம்முறை அதிக மழைப்பொழிவு கிடைத்தாலும் அதிக வெயில் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேகமாக வறட்சி நிலை மசினகுடியில் நிலவுகின்றது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என குறிப்பிட்டார்.
உதவி தலைமை ஆசிரியர் நந்தினி தலைமை வகித்து பேசுகையில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கு மீயா வாக்கிய காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என குறிப்பிட்டார். அதேபோல் புல்வெளிகளை பாதுகாப்பதன் மூலம் 70% மழை நீரை நம்மால் சேமிக்க முடியும் என குறிப்பிட்டார்.
ஆசிரியர் அணில் குமார் காலநிலை குறித்து நமக்கு காடுகளும் தாவரங்களும் மழை நீரை சேமிப்பதை குறித்து அதிகமாக கற்றுத் தருகிறது வெயில் அதிகமாக இருக்கும் போது மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு வெப்ப காலங்களை தற்காத்து கொள்கின்றது. வறட்சி அதிகம் நிலவும் போது கள்ளி செடிகள் அதிகமாக வருவது இயற்கை நமக்கு தரும் எச்சரிக்கையாக எடுத்துகொள்ள வேண்டும் என்றார். மசினகுடியில் உள்ள முட்புதற் காடுகள் குறைந்த நீரை எடுத்துகொண்டு வளரும் தாவரங்கள் ஆகும் என்றார். ஏழாம் வகுப்பு மாணவி ரீகா ஸ்ரீ காலநிலை மாற்றம் நீர் ஆதாரத்தை பெரிய அளவில் எதிர்காலத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டார். ஆறாம் வகுப்பு மாணவி ஸ்ரேயா இந்த வருடத்தின் சர்வதேச தண்ணீர் தினத்தின் கருப்பொருளாக பனி ப்பாறைகளை பாதுகாப்போம் என்பதாகும். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இயற்கையோடு இணைந்த மாற்று எரிசக்தி பயன்படுத்துவது எதிர்காலத்தின் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில் அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேமிப்பு குறுங்காடுகள் ஏற்படுத்துவது, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து பள்ளிகளிலும் வைப்பது கிராமங்களில் மழை நீர் சேமிப்பு,நீரோடைகள் மாசு படாமல் பாதுகாப்பது புல்வெளிகள் அவசியம் குறித்தும் ஒவ்வொரு கிராமமும் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய நீராதாரத்தை பாதுகாத்து குடிநீர் நிறைவு பெற்ற கிராமமாக மாற்றபட வேண்டிய செயல் திட்டங்களை கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்டார். மாணவர்களால் தான் இது சாத்தியப்படும் என குறிப்பிட்டார். நம் வீட்டுத் தோட்டத்தில் இயற்கை விவசாயம் என்ற செயல் திட்டத்தின் முக்கிய நோக்கத்தில் பள்ளிக்கூடத்தில் மூலிகை நாற்றுக்கள், பூச்செடிகள் நடப்பட்டன இன் நிகழ்வின் ஏற்பாட்டினை பள்ளி தேசிய பசுமை படை செய்திருந்தது.
சர்வதேச தண்ணீர் தினம்… நீலகிரி மசினகுடி ஜி ஆர்.ஜி நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு..!
