கோவை உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டி மீனா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 47) இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை -பொள்ளாச்சி பஸ்சில் பணியில் இருந்தார். அப்பொழுது அதே பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவரிடம் கண்டக்டர் கிருஷ்ணகுமார் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.அப்போது அந்த ஆசாமி டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்ரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் கைகளால் முகத்தில் குத்தினார்.இதைப் பார்த்த அதே பஸ்சில் பயணம் செய்த கிருஷ்ணசாமி என்பவர் தடுக்க முயன்றார். அவரையும் அந்த ஆசாமி கடித்து காயப்படுத்தினார். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து ரகளை செய்த கிணத்துக்கடவு வடபுதூரை சேர்ந்த பிரின்ஸ் (வயது 42) என்பவரை கைது செய்தனர் . அவர் லேத் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாது தடுத்தல் , தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..