கோவை பீளமேட்டில் சுகுணா ஆடிட்டோரியம்அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் சந்தன மரக் கடத்தல் கும்பல் சுவர் ஏரி குதித்து புகுந்தது. அங்கிருந்த 2 சந்தனமரங்களை வெட்டி சாய்த்தது.அந்த வீட்டில் குடியிருக்கும் ஐ.டி. ஊழியர்கள் இதை பார்த்து சத்தம் போட்டனர்.அதற்குள் அந்த கும்பல் 4 சந்தன கட்டைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
வீட்டில் புகுந்து சந்தனமரம் வெட்டி கடத்தல்.
