திருச்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்..!

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். தேர்தல் அறிக்கையின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தற்போது சரண் விடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை வஞ்சிக்கும் செயலாக பார்க்கிறோம் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கல்வி மருத்துவம் ஆகிய துறைகளில் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது சமூகநீதிக்கு எதிரானது எங்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில் வருகிற 30-ஆம் தேதி உயர் மட்ட குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன் நாகராஜன் குமாரவேல் பால்பாண்டி நவநீதன் ஆகியோர் தலைமை தாங்கினார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதுமான்அலி வரவேற்றார் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளருமான சண்முகநாதன் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர் .பத்து அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான ஆண் பெண் ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்..