ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் வெளி உணவு வழங்காமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தக்காளி சாதம், இட்லி, வெண்பொங்கல், உள்ளிட்ட உணவுகளை தானாகவே வாய் வழியாக எடுத்துக் கொண்டதாக கிருஷ்ணபிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். மருத்துவமனை சமையல் பிரிவில் ஜெயலலிதாவின் சமையல் கார அம்மா தயாரித்த உண்வையே அவர் உட்கொண்டதாகவும், சில சமயங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கேக் மற்றும் இனிப்புகளை ஜெயலலிதா எடுத்துக்கொண்டுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு அறிக்கை
இரவு நேரத்தில் தயிர்சாதத்தில் மாதுளைகளை தூவியும் இரவில் மினி இட்லி அல்லது உப்புமாவை ஜெயலலிதா உட்கொண்டுள்ளார். ஜெயலலிதா விரும்பிய உணவுகளை மட்டுமே வழங்கியதாகவும் மற்ற உணவுகளை அவர் மறுத்ததாகவும் மருத்துவர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மாறாக உணவு வழங்கப்பட்டது ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.