மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 468 கிலோ தங்க வைர நகைகள் ஏலம். முந்தியடிக்கும் அதிமுக நிர்வாகிகள்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது 1996 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு தொடுத்ததை அடுத்து, அவரிடமிருந்து 146 நாற்காலிகள், 44 ஆயிரம் ஏசிகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம் மற்றும் விலை மதிப்பு மிக்க வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டது.
இவரைத் தொடர்ந்து இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா அவர்களோடு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதா அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடகா அரசிடம் உள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என இந்த வழக்கின் தீர்ப்பானது 2017 ஆம் ஆண்டு வெளிவந்ததை அடுத்து இதற்கு முன்னதாகவே ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்து விட்டதால் அவர்கள் கைப்பற்றிய பொருட்களை ஏலத்தில் விடும் படி வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.
மனுவை விசாரணை செய்த பெங்களூர் சிவில் நீதிமன்றம் இது குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், லஞ்ச ஒழிப்பு துறையால் கைப்பற்றப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொருட்கள் அனைத்தும் அரசு வழக்கறிஞரை நியமித்து விரைவில் ஏலம் விடப்படும் எனக் கூறியுள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த பெரும்பாலானோரே இந்த பொருட்களை வாங்க முன் வருவார்கள் என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது. அதுமட்டுமின்றி தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் இருந்தபோதும் அவர்களுடைய உடமைகள் எதுவும் தமிழக அரசிடம் ஒப்படைத்து ஏலம் விடப்படாமல் கர்நாடக அரசே ஏலம் விடுவது சற்று அதிமுக-இடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்துகிறது.