வால்பாறையில் ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் புதிய தலைவராக கே.எம்.குஞ்சாலி நியமனம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத்தில் பி.டி. பூக்கோயாத்தங்கல் அறிவுறுத்தலின் படி வால்பாறை மஹல்லா நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கௌரவத்தலைவர் வால்பாறை வீ.அமீது,முத்தவல்லி என்.கே.கமாலுதீன், செயலாளர் சிடிசி யூசுப் மற்றும் நிர்வாகக்குழு முன்னிலையில் புதிய தலைவராக ஜெ.ஜெ.ஹோட்டல் கே.எம்.குஞ்சாலி தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் ஜும்மா தொழுகைக்குப் பின்பு புதிய தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்