கோவை வழக்கறிஞர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை.!!

கோவை கவுண்டம்பாளையம், சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 49) வக்கீல். இவர் தனியார் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார் .இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17.5 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 4 50 ஆயிரம் , 2 விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் .இவைளின் மொத்த மதிப்பு ரூ 15 லட்சம் இருக்கும். இது குறித்து ராஜ்குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.