கோவை கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு – மாடி வீட்டில் குடியிருந்த வாலிபர் கைவரிசை..!

கோவை வெள்ளானை பட்டி, குமரன் லே – அவுட்டை சேர்ந்தவர் மதன் (வயது 37) கல்லூரி பேராசிரியர். இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை பார்த்து வர சென்று விட்டார். இருவரும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் திருச்சி மாவட்டம் நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் ( வயது 26) என்பவர் தான் திருடியிருப்பது தெரியவந்தது. அவரைபோலீசார் கைது செய்தனர்.