கோவை கெம்பட்டி காலனி 4- வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43)அங்கு கடந்த 30 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு சுண்டக்காமுத்தூர் அண்ணா நகரை சேர்ந்த சத்யநாதன் (வயது 53) என்பவர் ரூ. 16 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.கொடுத்த பணத்தை வெங்கடேஷ் திருப்பி கேட்டார். ரூ 6 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். மீதி ரூ 1 லட்சத்தை அவரது கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்தார். மீதி ரூ. 9 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து வெங்கடேஷ் கடைவீதி போலீசில் புகார் செய்தார் போலீசார் சத்தியநாதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இவர் தனியார் சிட்- பண்ட்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரை போலீசார் தேடி வருகிறார்கள்.