கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்.

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி தான்யா (வயது 28) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .பின்னர் ஊட்டியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு சுவாதி ( வயது 12)காவியா ( வயது 4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் இறந்துவிட்டார் இதனால் தான்யா தனது 2 குழந்தைகளுடன் வெள்ளலூர் ஹவுசிங் வீட்டிலுள்ள தனது தாயார் பரமேஸ்வரி வீட்டில் வசித்து வந்தார் .இவர் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் வாங்கி இருந்தாராம் .அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் தனது தாயருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தான்யா தனது குழந்தை சுவாதி, காவியா, ஆகியோருடன் கடந்த 28ஆம் தேதி எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து தாயார் பரமேஸ்வரி போத்தனூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.