உடல் உறுப்பு தான விழிப்புணர்வு -கோவை மராத்தான்.

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
கே.எம்.சி.ஹெச்-ன் 27ஆம் ஆண்டு கோவை மாரத்தான் – 2023
உயிர் காத்திடும் அற்புதம்! உடல் உறுப்பு தானம்!! என்கின்ற முழக்கத்தோடு
உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 26 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் மரத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது அதன் தொடர்ச்சியாக 27 ஆம் ஆண்டு கோவை மாராத்தான் நிகழ்ச்சியை கோயமுத்தூர் மேற்கு மண்டல ஐ ஜி கே. பவானீஸ்வரி, ஐபிஎஸ், கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் உடல் உறுப்புகள் தானம் அளித்தவர்கள், பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவ துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், 16 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த மாரத்தான் கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவமனையில் துவங்கி அவினாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவுற்றது.
மாரத்தான் பற்றி மருத்துவமனை நிறுவனதலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள், ‘கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக 1991முதல் நடைபெற்று வருகிறது பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம். உடலுறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அது எவ்வாறு விலைமதிப்பற்ற உயிர்களைக் காத்திட உதவுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த வருட மாரத்தான் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்
மாராத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் சான்றிதழ் வழங்கப்பட்டது.