கோவையில் ஓடும் பஸ்சில் மற்றும் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை குறிவைக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது .இந்த கும்பலை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் ரவிக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் கன் னையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் பஸ்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கடலூர் நெல்லிக்குப்பம் | சக்தி நகரைச் சேர்ந்ததேவி ( வயது 35 )ரேவதி ( வயது 28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகைப் பறிப்புக்கு திட்டம் வகுத்துமூளையாக செயல் பட்டு வந்தது ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் நகை பறிப்பு கும்பலுக்கு தலைவியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் டவுன்ஹால் பகுதியில் சுற்றி திரிந்த பஞ்ச வர்ணத்தை போலீசார் நேற்று கைது செய்தனர் .தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பஞ்சவர்ணம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல இடங்களில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர்கள் திருட்டு நகைகளை விற்று சொந்த வீடு, மற்றும் நிலங்களை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இவர்களின் குழந்தைகளை இன்ஜினியரிங் உட்பட பட்டப்படிப்புகள் படிக்க வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு தெரியாமல் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 பெண்களும் கூட்டாக சேர்ந்து நகைகளை திருடி அவற்றை விற்று காஷ்மீர் முதல்கன்னியாகுமரி வரை இன்பசுற்றுலா சென்று மகிழ்ச்சியாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதான 3 பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.