கோவை அருகே உள்ள மருதமலையில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதபடுகிறது. தினந்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் |அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் பொருட்டு மலைக்கோவிலில் புதிதாக புறக்கவல் நிலை அமைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார் இதை தொடர்ந்து மலைக் கோவிலில் புதிதாக புற காவல் நிலைய அமைக்கும் இடத்தை உதவி கமிஷனர் ரவிக்குமார்,வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் மகேஷ் குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய புறக்கவல் நிலையம்பக்தர்களின் பாதுகாப்பிற்கும் அவர்கள் கொண்டுவரும் உடைமைகளின் பாதுகாப்பிற்கும் பயன் உள்ளதாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் சீராகும்.இங்கு தொடர்ந்து காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் கண்காணிப்பு கேமரா மூலம் அனைத்து பதிவுகளும் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவிப்புக்கள் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.