கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட புஞ்சை நிலங்கள் நிபந்தனை பட்டாவாக வழங்கப்பட்டது. தற்போது அரசு உபரி நிலமாக எடுத்து வைக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அவர்களிடத்தில் வழங்ககோரி அப்பகுதி பொதுமக்கள் சுல்தான் பேட்டை திமுக மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் A.N ராஜேந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில்
மனு கொடுத்தனர். அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,ரங்கன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வருகை தந்து மனுவை வழங்கினர்