பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட 125 பவுன் நகைகள் மீட்பு.கொள்ளையனின் மாமியார் கைது.

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த28 ஆம் தேதி அதிகாலையில் நகைக்கடையில் பின்புறம் மாடியில் சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 600 கிராம் விடியுள்ள தங்க- வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25 )என்பவன்தான் இந்த கொள்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. தர்மபுரி போலீசாரும் இவனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆனைமலையில் விஜய் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து தர்மபுரி போலீசார் அவனை பிடிக்க சென்றபோது வீட்டில் இருந்த மேற்கூறையை பிரித்து தப்பி சென்று விட்டான்.வீட்டில் இருந்த விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்து 3 கிலோ 200 கிராம் நகைகளை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் நர்மதாவின் தாயாரும் கொள்ளையனின் மாமியாருமான யோகா ராணி (வயது 43) வீடு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தும்பல ஹள்ளியில் உள்ளது.தனிப்படை உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர் .மேலும் யோகா ராணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீட்டைசுற்றி பூமிக்கு அடியிலும், குப்பை தொட்டியிலும்புதைத்து வைத்திருந்த 125 பவுன் நகைகளை போலீசார் நேற்று மீட்டனர் .தொடர்ந்து யோக ராணியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- நகை கடையில் கொள்ளை போன நகைகளில் பெரும்பகுதி 4 கிலோ அளவுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 250 கிராம் நகைகள் மட்டுமே மீட்கப்பட வேண்டியது உள்ளது. கொள்ளையன்விஜய் தொடர்ந்து தலைமறைவாக உள்ளான். அவனை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவான். இவ்வாறு கூறினார்.